Reason why computer boot very slowly and how to fix this problem?

உங்கள் கணினி மெதுவாக BOOT ஆகுவதற்கான காரணம் மற்றும் சரி செய்யும் வழியினைக் காணலாம்
பொதுவாக கணினி BOOT ஆகும் போது துவக்கத்தில்  (STARTUP-ல்) இயங்கும் மென்பொருட்களும் மற்றும் பின்னணியில் இயங்கும் மென்பொருட்களும் கணினி BOOT ஆகும் நேரத்தை அதிகமாக்கும்....

பின்னணியில் இயங்கும் மென்பொருட்களை TSR என குறிப்பிடுவார்கள்
TERMINATE AND STAY RESIDENT என்பதன் சுருக்கமே TSR...

TSR மற்றும் துவக்கத்தில் இயங்கும் மென்பொருளை (STARTUP ) முடக்கும் வழியினை காண்போம்



முதலில் START-ஐ அழுத்தவும் அதில் MSCONFIG என தட்டச்சு செய்து வரும் விடையை தேர்வு செய்யவும்



கிடைக்கும் திரையில் STARTUP-ஐ தேர்தெடுக்கவும்


STARTUP ITEM-உங்கள் கணினியில் BOOT ஆகும் சமயத்தில் இயங்கும் மென்பொருட்களின் வரிசை STARTUP ITEM-ற்கு கிழே இருக்கும்
MANUFACTURER- இதில் அந்த மென்பொருட்களின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இருக்கும்
COMMAND- அந்த மென்பொருள் உங்கள் கணினியில் எங்கே உள்ளன என்பதை காட்டும் 

அந்த STARTUP பட்டியலில் உள்ள MICROSOFT மென்பொருட்களை தவிர உங்களுக்கு தேவையில்லாத மென்பொருட்களின் தேர்வை நீக்க வேண்டும்(UNCHECK செய்ய வேண்டும்)
 
குறிப்பு:- கண்டிப்பாக MICROSOFT மென்பொருட்களின் தேர்வை நீக்கக்கூடாது (UNCHECK செய்ய கூடாது)
அடுத்து APPLY-ஐ அழுத்தி OK-ஐ அழுத்தவும்


பின் RESTART செய்யலாமா இல்லை RESTART செய்யாமல் வெளியேறலாமா என வினவும் RESTART-ஐ சொடுக்கவும்
முடிந்தது இப்போது உங்கள் கணினி முன்பைவிட வேகமாக BOOT ஆகும் 

Comments